கேள்வி
உங்கள் மார்க்கப்பற்று படி அனைத்து செயல்களும் இறைவனால் செய்யப்படுகிறது என்றால் நல்ல மனிதர் செய்யும் செயலும், இறைவனால் செய்யப்படுவதே தீய மனிதன் செய்யும் செயலும் இறைவனால் தான் செய்யப்படுகிறது. மறுமையில் அம்மனிதர்களுக்கு சுவர்க்கமும் நரகமும் கொடுக்கப்படுகிறது என்றால் நரகம் செல்லும் மனிதனின் செயல் இறைவனின் உத்தரவுப்படியே அம்மனிதனால் செய்யப்படுகிறது. அவனால் செய்யப்படவில்லை. அப்படி இருக்கும்போது அவனுக்கு நரகம் கொடுப்பது எவ்வகையில் நியாயம்? விளக்கம் தரவும்
பதில்
விதியை நம்புவதால் நீங்கள் கூறுவது போன்ற கேள்விகள் எழுகின்றன. விதியை நம்பவில்லை என்று வைத்துக் கொள்வோம் அப்போது வேறு விதமான கேள்விகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒவ்வொரு மனிதனும் அவனவன் முடிவின்படி தான் செயல்படுகிறான் இதில் இறைவனின் தலையீடு ஏதுமில்லை என்று நம்பினால் நீங்கள் கேட்டுள்ள கேள்வியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் கடவுள் என்பவன் பலவீனனாக கையாளலாகாதவனாகக் கருதப்படும் நிலை இதனால் ஏற்படும்.
நடந்தது நடந்து கொண்டிருப்பது இனி நடக்கவிருப்பது அனைத்தையும் அறிந்தவன் என்பது கடவுளின் பண்பாகும். அந்தப்பண்பு இல்லாதவன் கடவுளாக இருக்க முடியாது. நாளைய தினம் நீங்கள் சென்னை வரவிருக்கிறீர்கள். இது இன்றைக்கே இறைவனுக்குத் தெரியுமா என்று கேட்டால் தெரியாது என்று நீங்கள் கூறினால் அப்படி ஒருவனை இறைவனாக ஏற்கத் தேவையில்லை. எனக்கு எப்படி நாளை நடப்பது தெரியாதோ அது போல இறைவனுக்கும் நாளை நடப்பது தெரியாது என்று ஆகிறது. நாளை நான் சென்னை செல்வது இறைவனுக்குத் தெரியும் என்பது உங்கள் விடையாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்திருக்கிறானோ அது நடந்து தீரவேண்டும் என்ற முடிவு அதனுள் அடங்குகிறது. நாளை எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்துள்ளானோ அதைத் தான் உங்களால் செய்ய முடியுமே தவிர அதை மீற முடியாது என்பதும் இந்த விடைக்குள் அடங்கியுள்ளது.
அதாவது நாளை என்ன நடக்கும் என்பது இறைவனுக்குத் தெரியும் என்று நீங்கள் நம்பினால் விதியின் நம்பிக்கையும் அதனுள் அடங்குகிறது. அவனுக்குத் தெரியாது என்று நம்பினால் அப்படி ஒரு இறைவன் தேவையில்லை என்று ஆகிறது. இரண்டு நம்பிக்கைளிலுமே சில சங்கடங்கள் உள்ளன. இதனால்தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் விதியைப் பற்றி மட்டும் சர்ச்சை செய்யாதீர்கள்! உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தினர் அழிந்தது விதியில் சர்ச்சை செய்த காரணத்தினாலேயே என்று கூறியுள்ளார்கள் இஸ்லாத்தின் எந்தக் கொள்கை, கோட்பாடு, சட்டத் திட்டம் பற்றி என்ன கேள்வி கேட்கப்பட்டாலும் அதற்கு அறிவுப் பூர்வமான விடை இஸ்லாத்தில் உண்டு. விதியைப் பற்றி மட்டும் விவாதிக்க நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தடை விதித்து விட்டதால் அதற்கு மேல் எவரும் விளக்கம் கூற முடியாது. அப்படிக் கூற ஆரம்பித்தால் மேலே நாம் சுட்டிக் காட்டிய இரண்டு சங்கடங்களில் ஒன்றை எதிர் கொள்ளாமல் இருக்க முடியாது.
அறிவுப் பூர்வமான பல்லாயிரக்கணக்கான கொள்கை கோட்பாடுகளைத் தந்த இறைவன் நம்மைச் சோதிப்பதற்காகக் கூட அந்த நிலையை ஏற்படுத்தியிருக்கலாம். விதியையும் நம்பவேண்டும் மனிதர்கள் நல்லறங்களில் ஈடுபடவேண்டும் அவரவர் செயலுக்கு அவரவர் பொறுப்பு என்பதையும் நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. அதே நேரத்தில் விதியை நம்புவதால் மனிதகுலத்துக்குக்; கிடைக்கும் நன்மைகளை நினைத்துப் பார்த்தால் அதற்காகவாவது விதியை நம்புவது தான் மனித குலத்துக்கு உகந்ததாகும். ஒரு மனிதன் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி ஒரு காரியத்தில் ஈடுபடுகிறான். அந்தக் காரியம் கைகூடவில்லை என்று வைத்துக் கொள்வோம். விதியை நம்புகின்றவன் நாம் என்ன தான் முயன்றாலும் இறைவனின் நாட்டமும் இருக்க வேண்டுமல்லவா? எனக் கூறி மறுநாளே சகஜநிலைக்கு வந்து விடுவான்.
அவன் விதியை நம்பாதவன் என்று வைத்துக் கொள்வோம் இவ்வளவு பாடுபட்டும் கைகூடவில்லையே என்று புலம்பியே மனநோயாளியாவான் அந்த அளவுக்குப் போகாவிட்டாலும் சகஜ நிலைக்கு வருவது அதிகம் தாமதமாகும். மனிதன் துன்பங்களைச் சந்திக்கும்போது ஆடிப்போய் விடாமல் தடுக்கும் கேடயமே விதி என்னும் நம்பிக்கை. விதியை நம்பி முடங்கிக்கிட என்று மற்ற சில சமயங்கள் கூறுவது போல் இஸ்லாம் கூறவில்லை மனிதனின் நடவடிக்கைக்கு எந்தத் தடங்கலும் ஏற்படுத்தாத வகையில் தான் இஸ்லாம் விதியை நம்பச் சொல்கிறது. அந்த நிமிடம் வரை என்ன நடந்து விட்டதோ அது தான் நமது விதி என்பது நமக்குத் தெரியும் அடுத்தநிமிடம் நடப்பது நமக்குத் தெரியாததால் எதிர்கால விதி நமக்குத் தெரியாது.
எது நடந்து முடிந்து விட்டதோ விதி இன்னதென்று தெரிந்து விட்டதோ விதியை நம்பி ஆறுதல் படு! எது நடக்கவில்லையோ அதில் நீயாக திட்டமிட்டுச் செயல்படு என்று இஸ்லாம் கூறுகிறது. இதனால் மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கு எந்தத் தடையும் ஏற்படாது. தொழுவது, நோன்பு நோற்பது போன்ற வணக்கங்களை விதியின் அடிப்படையில் நாம் செய்கிறோம் என்று காரணம் கூறி தங்கள் செயலை நியாயப்படுத்துவோர் உளப்பூர்வமாக அவ்வாறு நியாயப்படுத்த முடியாது. ஒருவருக்கு எவ்வளவு செல்வம் கிடைக்கவேண்டும் என்ற விதி இருக்கிறதோ அதன்படி செல்வம் வந்து சேர்ந்து விடும் என்று நம்பி ஒருவர் எந்தத் தொழிலும் செய்யாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கமாட்டார். மாறாக செல்வத்தைத் தேடி அலைவார் இந்த அக்கறையை வணக்க வழிபாட்டுகளுக்கும் வழங்க வேண்டும் என்று அவர் நினைக்காதது முரண்பாடாகவும் உள்ளது.
எனவே விதியைப் பற்றி சர்ச்சைகளைத் தவிர்த்து விட்டு மனிதர்களுக்கு அறிந்து கொள்ளமுடியாத ஒன்றிரண்டு விஷயங்களை அல்லாஹ் வைத்திருக்கிறான் என்று முடிவு செய்து விதியை நம்புவதால் கிடைக்கும் பயன்களை மனதில் நிறுத்தி விதியை நம்புவது தான் நல்லது
Sunday, June 27, 2004
Saturday, June 19, 2004
வெளிநாடுகளுக்கு செல்வதால்
கேள்வி
முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் சம்பாதிக்க வெளிநாடுகளுக்கு செல்வதால், குடும்பப் பாசம், குழந்தைப் பாசம் ஆகியவற்றை இழப்பதுடன், மனைவியைப் பல வருடம் காக்க வைத்து நோகடிக்கின்றார்கள். இதைத் தவிர்க்க முடியாதா? ஜெயராஜ்
பதில்.
முஸ்லிம்கள் சம்பாதிப்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்வது உண்மைதான். வெளிநாடுச் செல்வதால் முஸ்லிம்கள் அங்கு அதிகமாகச் சம்பாதிப்பதில்லை. எழுபத்தைந்து ஆயிரம் ரூபாய் செலவுச் செய்து வெளிநாடுச் செல்பவர்கள், அங்கே மாதம் மூன்று அல்லது நான்காயிரம் ரூபாய்களைத்தான் ஊதியமாகப் பெறுகிறார்கள் கட்ட வெளக்கமாராக இருந்தாலும் கப்ப வெளக்கமாராக இருக்கனும் என்ற பழமொழி முஸ்லிம்களிடம் வழக்கத்தில் உள்ளது.
குடும்பத்தைக் கவனிக்காமல் பிரிந்து வணக்க வழிபாடுகளில் கூட ஈடுபடக்கூடாது என்பது இறைவனின் கட்டளையாகும் அதனடிப்படையில் வருடக்கணக்கில் மனைவி மக்களைப் பிரிந்திருப்பதை இஸ்லாம் ஏற்கவில்லை.
இங்கேயே (இந்தியாவில்) இருந்து கஞ்சிக் குடித்துக் கொண்டாவது குடும்பத்தோடு வாழுங்கள் என்று நாங்கள் மேடைதோறும் முழங்கி வருகின்றோம். இளமை என்பது ஒரு பொக்கிஷம் இந்தப் பொக்கிஷத்தை இழக்காதீர்கள் என்று தொடர்ந்துச் சொல்லிக் கொண்டு வருகின்றோம். உங்களோடு (இந்துக்களோடு) சேர்ந்து நாங்களும் வேதனையடைகின்றோம் சங்கடப்படுகின்றோம்.

நடிப்பை ஏன் அனுமதிக்கவில்லை?
கேள்வி
இஸ்லாம் நடிப்பை ஏன் அனுமதிக்கவில்லை? மம்முட்டி, நாசர், போன்ற முஸ்லிம்கள் நடிகர்களாக உள்ளார்களே? ஜி. பிரபாகரன்
பதில்.
ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கின்றவர்கள் கொடுப்பதைவிட நடிகர்கள் கொடுக்கின்ற தான தர்மங்கள் குறைவுதான். நடிகர்கள் என்றாலே நடிப்பவர்கள்தான். இவர்கள் நடித்து நாட்டையே நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நாம் கிறுக்கர்களாக ஆக்கப்படுகிறோம் என்பதைக்கூட விளங்காமல் தியேட்டரில் மூன்று மணி நேரம் அமர்ந்து ரசிக்கின்றோம். நாம் மூளையில்லாதவர்கள் என்பதைப் பணம் கொடுத்து நிரூபிக்கின்றோம். சினிமாவில் காண்பிப்பது எல்லாம் சாத்தியப்படுமா? என்பதை நாம் சிந்தித்தது உண்டா?
பெண்களைக் கவர்ச்சியாகக் காண்பித்தும் அங்கங்களைத் தனித்தனியாகக் காண்பித்தும், ஆண்களின் உள்ளங்களில் சபலங்களை உருவாக்குகின்றனர். ராகிங் போன்றக் கொடுமைகளுக்கு இது தான் காரணம். ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் சினிமாவின் கேடுகள் புரியும்.

பெண்கள் தலைமைப் பொறுப்பில்
கேள்வி
இஸ்லாத்தில் பெண்கள் தலைமைப் பொறுப்பில் இருக்கக் கூடாது, நாடாளக் கூடாது என்கிறார்கள். ஜமாஅத்திலும் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், பல நாடுகளில் முஸ்லிம் பெண்கள் பொறுப்பில் உள்ளார்களே? சரவணன்.
பதில்.
பெண்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தால் வெற்றிப் பெறுவதில்லை என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆண்கள் பொறுப்பிற்கு வரும்போது தியாகங்கள் செய்து. தொண்டுகள் புரிந்து வருகின்றனர். பெண்கள் அப்படியல்ல மனைவி அல்லது மகள் என்றப் பின்னணியுடன் தான் தலைமைப் பொறுப்புக்கு வருகின்றனர். பெண்கள் மீது தியாகங்களைச் சுமத்த முடியாது.
தலைமைத்துவம் என்பது தியாகங்களுக்குப் பின்னால் உள்ள விஷயமாகும். பூட்டோவின் மகள் என்ற அந்தஸ்துடன் பேநாசீரும், நேருவின் மகள் என்ற அந்தஸ்துடன் இந்திரா காந்தியும், எம்.ஜி.ஆருடன் நடித்தவர் என்றப் பின்னணியுடன் ஜெயலலிதாவும் தலைமைத்துவத்திற்கு வந்தாலும் இவர்கள் எல்லோரும் பிரகாசிக்கவில்லை. ஆகவே தான் தலைமைப் பொறுப்புக்குப் பெண்கள் தகுதியானவர்கள் அல்ல என்கிறது இஸ்லாம்.

பாகிஸ்தான் வென்றால்
கேள்வி
இந்தியாவில் முஸ்லிம்களுக்கு அனைத்து உரிமைகளும் இருக்கின்றது. ஆனால், பாகிஸ்தானில் இந்துக்களுக்கு ஓட்டுரிமை கூட இல்லை. இந்தியாவும், பாகிஸ்தானும் கிரிக்கெட் விளையாடும்போது பாகிஸ்தான் வென்றால் கார்கில் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் அதைக் கொண்டாடுகின்றார்கள். இந்தியா வென்றால் கொண்டாடுவது இல்லை. இது நியாயமா? கருணாகரன்
பதில்.
விளையாட்டைத் தேச பக்தியின் அளவுகோளாகக் கொள்ளக் கூடாது. விளையாட்டு வீரர்களே தேசத்திற்காக விளையாடாமல் பணத்திற்காக விளையாடுகிறார்கள், பணம் வாங்கிக் கொண்டுத் தோற்கிறார்கள். இந்தியர்கள் மட்டுமின்றி, பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க வீரர்களும் பணத்திற்காகத்தான் விளையாடுகிறார்கள். ஒரு நாடு விளையாட்டில் தோல்வியடைந்தால், அந்த நாடே தோல்வியுற்றதாகக் கருதக்கூடாது. இரு நாடுகளுக்கிடையில் போர் மூண்டு தனது ராணுவம் வெற்றியடையும்போது தான் அந்த நாடே வெற்றி பெற்றதாக அர்த்தம். (கூட்டத்தில் வரவேற்பு)
விளையாட்டில் என்ன திறமை இருக்கிறது? என்ன தேசப்பற்று இருக்கிறது? இந்திய நடிகர்களான ரஜினி, கமல், அமிதாப்பச்சன் போன்றவர்கள் இருக்கும் போதே இவர்களைத் தாண்டி ஆங்கில நடிகர் ஜாக்கிஜானை ஏன் ரசிக்கின்றீர்கள்? இதை நாம் தவறு என்றுச் சொல்லவில்லை. பாகிஸ்தான் ஜெயிக்கும் போது அதைக் கொண்டாடும் முஸ்லிம்களின் செயலை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். தேசத்தின் வெற்றி விளையாட்டில்தான் இருக்கிறது என்பதையும் ஏற்றுக் கொள்ள இயலாது. விளையாட்டு தேச பக்தியின் அளவுகோளும் அல்ல.

தாயின் காலடியில் சுவர்க்கம்
கேள்வி
தாயின் காலடியில் சுவர்க்கம் இருப்பதாக இஸ்லாம் கூறுகிறது. அந்தத் தாயின் காலில் விழுவதை ஏன் இஸ்லாம் பாவம் என்று கூறுகிறது? மாரிமுத்து
பதில்
இது இலக்கியச் சொல். தாய் நிற்கின்ற இடத்தை தோண்டிப் பார்த்தால் அங்கே சுவர்க்கம் இருக்குமா? தாயின் காலடியில் சுவர்க்கம் என்பது தாய்க்குக் கட்டுப்பட்டு, மரியாதை கொடுத்து கண்ணியப்படுத்த வேண்டும் என்பதாகும்.
மனிதர்கள் எல்லாம் சமம் என்பதால் யாரும் யாருடைய காலிலும் விழுவதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். பகுத்தறிவுள்ள நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். இந்த அறிவை யாருடைய காலிலும் வைத்துவிடக் கூடாது இந்த கிரீடத்தை; (அறிவை) கீழே இறக்கவும் கூடாது.
தன்னுடைய தாய் தந்தையின் காலில் விழுந்து மரியாதைச் செய்யும் பலர் அந்தத் தாய் தந்தையர்களுக்கு உணவளிக்க மறுப்பதையும், கொடுமைப் படுத்துவதையும், மரியாதைக்குறைவாக நடத்துவதையும் பார்க்கின்றோம். ஆகவே இதை வைத்துக் கொண்டு காலில் விழுவதை நியாயப்படுத்தக் கூடாது.

Thursday, June 17, 2004
சிறுசேமிப்பு
கேள்வி
சிறுசேமிப்பு நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவுகின்றது. இஸ்லாம் சிறுசேமிப்பை ஏன் வட்டி என்று சொல்கிறது?
பதில்
இஸ்லாம் வட்டியோடு எந்தச் சந்தர்ப்பத்திலும் சமரசம் செய்துக் கொள்ளவில்லை. இறைவனுக்கு இணை வைத்தல், கொலை மற்றும் வட்டி ஆகிய மூன்றை இஸ்லாம் பெரிய பாவங்கள் என்று கூறுகின்றது. இறைவனுக்கு இணை கற்பித்தல், கொலையுடன். வட்டியை இஸ்லாம் இணைத்துள்ளதை கவனித்தாலே வட்டியின் கொடுமைகள் விளங்கும்.
இந்தியா தனது பட்ஜெட்டில் இருபத்தாறு சதவீதத்தை வட்டிக்காக ஒதுக்குகின்றது. இந்தியாவின் ஓராண்டு வருமானம் நான்கு லட்சம் கோடி ரூபாய். இதில் ஒரு லட்சம் கோடி ரூபாயை வட்டியாகக் கட்டுகின்றது. வெளிநாடுகளில் கடன் வாங்காமல் இருந்தால் விலைவாசியில் இருபத்தைந்து சதவீதத்தை குறைத்திருக்கலாம்.
இந்த வட்டியை மக்களிடம் கடனாக பெற்றுக் கொடுப்போம் என்று நமது நிதியமைச்சர் கூறுகின்றார். நாட்டின் உற்பத்தியைப் பெருக்கிக் கொடுப்போம் என்று கூறவில்லை. சேமிப்பு என்ற பெயரில் மக்களிடம் வாங்கி கொடுப்போம் என்று கூறுகின்றார். இப்படி வாங்கித்தான் நமது அரசாங்கம் அமெரிக்கா, உலக வங்கி போன்றவற்றிற்கு வட்டி கட்டுகின்றது. வட்டிக்கு கடன் வாங்கித் தொழில் செய்பவன் அதிகமான விலை வைத்து வியாபாரம் செய்கிறான். தான் பெற்ற கடனுக்கான வட்டியை நுகர்வோரிடம்தான் வியாபாரி வசூலிக்கிறான். வட்டியில்லாமல் தொழில் செய்யும்; போது விலைவாசிகள் குறையும்.
சிறுசேமிப்பு என்ற பெயரில் நாம் வங்கி, போஸ்ட் ஆபிஸில் போடும் பணத்தை சிபாரிசு உள்ளவர்களுக்கும் எம்.பி, எம்.எல்.ஏ, அமைச்சர் மற்றும் பண முதலைகளுக்கும் தான் வங்கிகள் கடனாகக் கொடுக்கின்றன. ஏழைகள் சைக்கிள் வாங்க கடன் கேட்டால் கூடக் கொடுப்பதில்லை என்று பதிலளித்துக் கொண்டிருந்த போது "ஏன் இதை வட்டி என்கிறீர்கள்? வியாபாரமாக எடுத்துக் கொள்ள வேண்டியது தானே?" என்று திருமதி சிவகாமசுந்தரி கேட்ட துணைக் கேள்விக்கு..
வியாராரத்தில் ஒரு முறையோடு தொடர்பு முடிந்துவிடும். ஆனால் வட்டி அப்படியல்ல மாதா மாதம் என்று சங்கிலித் தொடர்போல் தொடர் உறவு முறையாகும். இதனால் மனிதாபிமான உறவுகள் அறுந்து போகிறது கடன் கொடுக்கும் தன்மையும் அழிந்து வருகின்றது.
சீனா மற்றும் அரபு நாடுகளில் வட்டி கிடையாது. இந்த இரு நாடுகளும் வளர்ச்சியடைய வில்லையா? சவூதி உலகின் பணக்கார நாடாக இல்லையா? நாங்கள் வட்டியை எதிர்ப்பதோடு அதை ஆதரிக்க வேண்டாம் என்று உங்களையும் கேட்டுக் கொள்கின்றோம்.
சேமிப்பு விஷயத்தில் எங்களுக்கு மாறுபட்டக் கருத்துக் கிடையாது. சேமிப்பை ஊக்குவிக்க வேண்டும். சேமிப்பை இஸ்லாம் தவறு என்று சொல்ல வில்லை. மாறாக உங்கள் சந்ததிகளை கையேந்துபவர்களாக விட்டுச்செல்வதைவிட தன்னிறைவு பெற்றவர்களாக விட்டுச் செல்லுங்கள் என்பது நபிகள் நாயகத்தின் பொன் மொழியாகும்.

Wednesday, June 16, 2004
வாசகர்களுக்கு
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோனுமாகிய கடவுளின் பெயரால்,
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
மனிதச் சமுதாயத்திற்கு நல்ல செய்திகள் போய் சேருவதற்கு இணையதள செலவு தடையாக இருக்கக்கூடாது என நினைத்ததால் ''இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்" நிகழ்ச்சிக்காகவென்றே தனி வலைப்பதிவு உருவாக்கியிருக்கிறேன்.
இதில் தொலைகாட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட முஸ்லிம் அல்லாதோரின் இஸ்லாம் சம்பந்தப்பட்ட கேள்விகளும் மவ்லவி பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் பதில்களும் வெளியிடப்படும். இந்நிகழ்ச்சியின் வீடியோவை பார்க்க ரீட்இஸ்லாம்.நெட் இணையதளத்திற்கு செல்லவும்.
இப்படிக்கு
நீங்கள் சுவர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என விரும்பும்
உங்கள் நண்பன்

Subscribe to:
Posts (Atom)